• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் புத்தாண்டு நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும் – ராமர் சேனா அமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு

December 31, 2018 தண்டோரா குழு

கோவையில் புத்தாண்டு நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு ராமர் சேனா அமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

தமிழ்நாட்டில் தமிழர்கள் ஆங்கில புத்தாண்டை கொண்டாடும் அளவிற்கு, தமிழ் புத்தாண்டை வரவேற்பதில்லை. மேலும் ஆங்கிலேய கலாச்சாரம் நம் தமிழ்நாட்டில் அதிக அளவில் பரவி வருகிறது. இதன் பாதிப்பாக, நள்ளிரவில் அதிக அளவில் விபத்துக்கள் நடக்கின்றன, மேலும் மதுபாட்டில்களை சாலையில் உடைத்தல், பெண்களிடம் தவறான முறையில் நடந்து கொள்ளுதல், போன்ற கலாச்சார சீரழிவுகள் மிகவும் அதிகமாக வருடாவருடம் நடந்துகொண்டு வருகிறது. இதை முற்றிலும் தடுக்கும் விதமாக ராமர் சேனா அமைப்பின் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் நிறுவன தலைவர் ஆறுமுகம் கோவை மாவட்ட தலைவர் பிரபாகரன்
கோவை மண்டல தலைவர் மகேந்திரன் ராம சேனா அமைப்பின் தொண்டர்கள் குழுவாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நிறுவன தலைவர் ஆறுமுகம் கூறுகையில்,

புத்தாண்டை கொண்டாடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் புத்தாண்டு பிறக்கும் அன்று இரவு பொதுமக்களுக்கு மிகவும் இன்னல்களை ஒரு சிலர், ஏற்படுத்தி விடுகின்றனர். உதாரணமாக மதுபாட்டில்களை சாலையில் உடைத்தல், இரவு நேரங்களில் பயங்கரமாக வாகனங்களை இயக்கி, விபத்துக்களை ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. இதையெல்லாம் தடுத்து நிறுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம் எங்களின் கோரிக்கை மனுவை ஏற்றுக்கொண்ட ஆட்சியர் சிறப்பான முறையில் செயல்படுவார் என எதிர்பார்க்கிறோம் என கூறினார்.

மேலும் படிக்க