October 11, 2025
தண்டோரா குழு
இந்தியாவில் நிகரற்ற தரம், புதுமையான வடிவமைப்பு மற்றும் தற்காலத்திற்கு ஏற்ற நவீன ஆபரணங்களுக்காக மக்களின் பெரும் நம்பிக்கையைப் பெற்ற ஜோஸ் ஆலுக்காஸ், கோவை மாநகரில் அதன் புதிய மிகப்பெரிய ஷோரூமை திறந்திருக்கிறது.
தமிழ்நாட்டுடன் அது கொண்டிருக்கும் நீடித்த பிணைப்பை மேலும் வலுப்படுத்தும் இந்நிகழ்வு, இம்மாநில மக்களுடன் ஜோஸ் ஆலுக்காஸ் கொண்டிருக்கும் நீண்டகால நல்லுறவை மேலும் ஆழமாக்கியிருக்கிறது. ஜோஸ் ஆலுக்காஸ்–ன் பிராண்டு தூதரும், திரைப்பட நடிகருமான ஆர்.மாதவன் இந்த பிரமாண்ட ஆபரண ஷோரூமை திறந்து வைத்தார்.
ஜோஸ் ஆலுக்காஸ் குழுமத்தின் தலைவரான ஜோஸ் ஆலுக்காஸ் – ன் சுய வரலாறு புத்தகமான ‘தங்கம்’ (கோல்டு) என்பதன் தமிழ் பதிப்பையும் நடிகர் மாதவன் வெளியிட்டு அறிமுகம் செய்தார். கோலாகலமாக நடைபெற்ற இத்திறப்பு விழாவில் ஜோஸ் ஆலுக்காஸ்-ன் நிர்வாக இயக்குநர்கள் வர்கீஸ் ஆலுக்காஸ், பால் ஆலுக்காஸ் மற்றும் ஜான் ஆலுக்காஸ் ஆகியோரும் பங்கேற்றனர்.
கோயம்புத்தூர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.கணபதி ராஜ்குமார், கோயம்புத்தூர் மாநகரின் மேயர்.கே. ரங்கநாயகி,துணை மேயர் ஆர். வெற்றிச்செல்வன் ஆகியோரும் இந்நிகழ்வில் பங்கேற்று சிறப்பித்தனர். இரு தளங்களுடன் 8000 சதுரஅடி பரப்பளவில் அமைந்திருக்கும் இந்த புதிய ஷோரூம், கோயம்புத்தூரில் ஜோஸ் ஆலுக்காஸ் – ன் மிகப்பெரிய ஆபரண விற்பனையகமாகும்.
வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட, இனிய ஷாப்பிங் அனுபவத்தை வழங்குவதற்கென இது வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த பிரபல பிராண்டின் தங்க, வைர, பிளாட்டினம் மற்றும் வெள்ளி ஆபரணங்களின் ஒட்டுமொத்த அணிவரிசையும் இந்த ஷோரூமில் இடம்பெற்றிருக்கிறது. மணப்பெண்ணுக்கான ஆபரணங்கள், விழாக்கால மற்றும் நவீன ஆபரண கலெக்ஷன்கள் என பல்வேறு வகையினங்களின் கீழ் இங்கு கிடைக்கும் ஒவ்வொரு ஆபரணமும் இந்த பிராண்டின் தனி முத்திரையான நகை வடிவமைப்பில் நிபுணத்துவத்தை பிரதிபலிக்கிறது.
பாரம்பரியமான படைப்பாக்கத்திறன் மற்றும் நவீன வடிவமைப்பு உத்திகளின் நேர்த்தியான கலவையாக ஆபரணங்களின் அணிவரிசைகள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
ஜோஸ் ஆலுக்காஸ் குழுமத்தின் தலைவர் ஜோஸ் ஆலுக்காஸ் இத்தொடக்க விழா நிகழ்வில் பேசுகையில்,
“எமது வளர்ச்சி பயணத்தில் தமிழ்நாடு எப்போதும் மிக முக்கியப் பங்கினை வகித்து வருகிறது.இங்கு தான் அதிக எண்ணிக்கையிலான ஷோரூம்களையும் மற்றும் வலுவான, பரவலான இருப்பினையும் நாங்கள் கொண்டிருக்கிறோம்.தமிழ்நாட்டின் குறிப்பாக கோயம்புத்தூர் மாநகரின் மக்கள்,ஜோஸ் ஆலுக்காஸ் – ன் பயணத்தை வடிவமைத்து மேம்படுத்துவதில் மிகச்சிறப்பாக பங்காற்றியிருக்கின்றனர்.அவர்களின் நம்பிக்கை மற்றும் பாசத்திற்கு எமது சமர்ப்பணமாக இந்த பிரதான ஆபரண விற்பனையகம் அமைந்திருக்கிறது. மிக நேர்த்தியான தயாரிப்பு உத்திகளுடனும், படைப்பாக்கத் திறன் கொண்ட வடிவமைப்புகளுடனும் மக்களுக்கு சேவையாற்றுவதில் நாங்கள் கொண்டிருக்கும் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை பிரதிபலிப்பதாக இந்த ஷோரூம் இருக்கிறது.” என்று கூறினார்.
ஜோஸ் ஆலுக்காஸ் -ன் பிராண்டு தூதரான பிரபல நடிகர் ஆர். மாதவன் இந்நிகழ்வில் பேசுகையில்,
“ஜோஸ் ஆலுக்காஸ் உடனான எனது உறவும், பிணைப்பும் எப்போதும் ஆழமானதாகவும், தனித்துவமானதாகவும் இருந்து வருகிறது. அவர்களது ப்ரீமியம் ஷோரூம்களுக்குள் நாம் நுழையும் ஒவ்வொரு நேரத்திலும் நகை வடிவமைப்புத் திறனோடு அற்புதமான உணர்வுகளை இந்த பிராண்டு எவ்வளவு அழகாக இணைக்கிறது என்பதை நான் பார்க்கிறேன்.கோவை மாநகரில் தொடங்கப்பட்டிருக்கும் இந்த புதிய பிரமாண்ட ஷோரூம்,அதே உணர்வை கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டின் மக்களுக்கு உண்மையிலேயே சிறப்பான அனுபவத்தை உருவாக்க வடிவமைப்புத் திறனும், பாரம்பரிய செழுமையும் இங்கு ஒருங்கிணைந்திருக்கின்றன.” என்று கூறினார். தங்கம்’ (கோல்டு) என்ற புத்தகத்தின் தமிழ் பதிப்பை பெற்றுக்கொண்டு அவர் கூறியதாவது: “தமிழ் மொழியில் ‘தங்கம்’ என்ற சுய வரலாறு நூலின் முதல் பிரதியை பெறுவது பெருமையையும், தாழ்மை உணர்வையும் ஒருங்கிணைத்து தரும் தருணமாக இருக்கிறது. ஜோஸ் ஆலுக்காஸ் அவர்களின் அசாதாரணமான பயணத்தையும் இந்த பாரம்பரியம் மிக்க பிராண்டை வடிவமைக்க உதவியிருக்கும் மதிப்பீடுகளையும் இந்த புத்தகம் தெளிவாக சித்தரிக்கிறது.
கடுமையான உழைப்பு, தொலைநோக்குப் பார்வை மற்றும் பெரிய கனவுகளை காணும் தைரியம் ஆகியவற்றை நம்புகின்ற எதிர்கால தலைமுறையினருக்கு உத்வேகமும், நம்பிக்கையும் அளிக்கும் நூலாக இது நிச்சயம் இருக்கும்.” என்றார்.