• Download mobile app
05 Nov 2025, WednesdayEdition - 3556
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் உண்ணாவிரத போராட்டம்

January 10, 2019

தேவந்திரகுல வேளார் வகுப்பினரை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருந்து விலக்கி பிற்படுத்துப்பட்டோர் பட்டியலில் இணைக்க மத்திய மாநில அரசை வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்டம் டாடாபாத் சாலையில் அமைத்து புதிய தமிழகம் கட்சி மற்றும் தேவந்திரகுல வேளாளர் மீட்பு குழு இணைந்து நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் சுமார் 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

உண்ணாவிரதம் பந்தலில் இருந்து பேட்டி அளித்த டாக்டர் கிருஷ்ணசாமி,

2 கோடிக்கு மேல் உள்ள தேவேந்திரகுல மக்களை பட்டியல் பிரிவு என்றளைக்கப்படும் எஸ்.சி பிரிவில் சேர்த்துள்ளனர். இதனால் சமூக முன்னேற்றம் தடைபட்டுள்ளது.தேவேந்திரகுல வேளாளரில் உள்ள 7 உட்பிரிவுகளை

இணைத்து ஒரே பிரிவாக இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்த்து தமிழக அரசாணை வெளியிட வேண்டும். மத்திய மாநில அரசு காலம் தாழ்தாமல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில அரசு தேவையில்லாமல் காலம்தாழ்த்தி வருகிறது. அடுத்த கட்டமாக பிப்ரவரி மாதம் 6ம் தேதி மாநிலம் தழுவிய போராட்டம் சென்னையில் நடைபெறும் என அவர் கூறினார்.

மேலும் படிக்க