• Download mobile app
29 Apr 2024, MondayEdition - 3001
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் புகார் கொடுத்த இளைஞர் மீது திமுக பிரமுகர் கொலைவெறித் தாக்குதல்

November 24, 2020 தண்டோரா குழு

கோவையில் புகார் கொடுத்த இளைஞர் மீது திமுக பிரமுகர் கொலைவெறித் தாக்குதல். உயிருக்கு பயந்து வெளியூர் சென்று திரும்பிய நிலையில் இந்தத் தாக்குதல் நடந்ததாக கோவை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

கோவை சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்தவர் மாசானமுத்து என்ற இளைஞர் .அதே பகுதியை சேர்ந்த மீன்கடை சிவா என்பவர் மீது கடந்த சில மாதங்களுக்கு முன்பு 24 ஏக்கர் அரசு நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்ததாக கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் முதல்வரின் தனிப்பிரிவு உட்பட 16 அரசு அலுவலகங்களில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை தொடர்ந்து மாசானமுத்து விற்கு மீன் கடை சிவா மற்றும் அவருடைய அடியாட்கள் தொடர்ந்து கொலை மிரட்டல் விடப்பட்டதாக தெரிகிறது இதனை தொடர்ந்து உயிருக்கு பயந்து ஊரை விட்டுச் சென்ற மாசானமுத்து கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக தன் சொந்த ஊர் சிங்கநல்லூர் திரும்பியுள்ளார்.

இந்த நிலையில் நேற்று கோவை சிங்காநல்லூர் பஸ் நிறுத்தம் அருகே வைத்து மீன் கடை சிவா மற்றும் அவருடைய அடியாட்கள் ஆயுதங்களுடன் ரோட்டில் துரத்தித் துரத்தி கொலைவெறி தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது. இதனை அடுத்து தனியார் மருத்துவமனையில் முதலுதவி பெற்று இன்று காலை கோவை மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரணிடம் புகார் மனு அளிக்க வந்த மாசானமுத்து செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியது,

கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த பிரபல திமுக பிரமுகர் மீன் கடை சிவா என்பவர் சட்டவிரோத செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்து கொண்டிருப்பதாகவும் இதுகுறித்து பலமுறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் மேலும் அதேபோல் கோவை சிங்காநல்லூர் அருகில் உள்ள குளத்தின் அருகில் உள்ள 24 ஏக்கர் நிலத்தை சட்டவிரோதமாக அபகரித்துள்ளதாக கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் தமிழக முதல்வரின் தனிப்பிரிவு உட்பட 16 இடங்களுக்கு புகார் மனு அளித்திருந்தேன் அதனைத் தொடர்ந்து இரவு நேரங்களில் எனது வீட்டிற்கு மின் கடை சிவாவின் அடியாட்கள் தொடர்ந்து வந்து மிரட்டி வந்ததால் உயிருக்கு பயந்து வெளியூர் தப்பி சென்று விட்டேன் அதன் பிறகு தற்போது கோவை சிங்காநல்லூர் வந்து ஒரு வாரம் ஆனது நேற்று சிங்காநல்லூர் பஸ் நிறுத்தம் அருகே நடந்து வந்து கொண்டிருக்கும் பொழுது குறுக்கே வந்து காரை நிறுத்தி மீன் கடை சிவா மற்றும் அவருடன் உள்ள அடி ஆட்கள் என்னை கொலை வெறியுடன் ஆயுதங்களோடு என்னை தாக்கினார்கள்.

அங்கிருந்து உயிர் பிழைத்து தப்பி வந்து விட்டேன். சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு, புகார் தெரிவித்த என்மீது கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்ட திமுக பிரமுகர் மீன்கடை சிவா மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும் படிக்க