August 7, 2020
தண்டோரா குழு
பிரபல நிழல் உலக தாதா அங்கொடா லொக்கா கடந்த ஜூலை 3ம் தேதி கோவையில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை கடத்தல் மன்னன் அங்கொட லொக்கா உயிரிழந்த விவகாரம் போலி ஆவணம் தயாரிப்பு தொடர்பாக கோவை சிபிசிஐடி போலீசார் இரு வழக்குகள் பதிவு செய்தனர்.அங்கொட லொக்கா மரணம் தொடர்பாக ஒரு வழக்கும்,போலி ஆதார் அட்டை மூலம் இந்திய குடியுரிமை இருப்பது போல் ஆவணங்கள் தயாரித்தது என இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.இதனையடுத்து சி.பி.சி.ஐ.டி ஐ.ஜி சங்கர் கோவையில் முகாமிட்டு போதை பொருள் கடத்தல் மன்னன் அங்கொட லொக்கா தொடர்பான வழக்குகளை சிபிசிஐடி விசாரித்து வருகின்றார்.
இந்நிலையில், விசாரணையில் அங்கொட லொக்கா சினிமாவில் நடிக்க போவதாக கூறி ஆர்.எஸ்.புரம் பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பிப்ரவரி 19 தேதி ப்ளாஸ்டிக்_சர்ஜரி செய்து கொண்டது அம்பலமாகியுள்ளது.சிறிய அளவிலான மூக்கை, சற்று பெரிதாக்கி உள்ளார் என்பது கூறப்படுகிறது.