• Download mobile app
05 May 2024, SundayEdition - 3007
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்ததால் மாணவிகள் தற்கொலை முயற்சி

May 16, 2018

பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து,தேர்வில் தோல்வியடைந்ததால் இரு மாணவிகள் கோவையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.

கோவை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிபவர் ஜெயலட்சுமி.இவரது மகள் பிரியா 12 வகுப்பு தேர்வு எழுதியுள்ள நிலையில் இன்று முடிவுகள் வெளியானது.பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்ததால் மனமுடைந்த பிரியா சி.எஸ்.ஐ பள்ளி சாலையிலுள்ள காவலர் குடியிருப்பில், தனது வீட்டின் மூன்றாவது மாடியில் இருந்து மொட்டை மாடிக்கு சென்றவர் மேலே இருந்து கீழே குதித்துள்ளார்.

பிரியா குதிப்பதைப்பார்த்த அவரது தாயார் காப்பாற்றியதால் கை முறிவு ஏற்பட்டு தற்போது அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.பிரியாவை காப்பாற்றிய அவரது தாயாருக்கு தலையில் லேசான காயம் ஏற்பட்டது.

இதே போல சிங்காநல்லூர் பகுதியைச்சேர்ந்த வசந்த் பாபுவின் மகள் ஏஞ்சலின் ஜெனிபர் (18) தனியார் பயிற்சி மையத்தின் மூலம் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதியிருந்தார்.இன்றைக்கு வெளியான தேர்வு முடிவில் தோல்வியடைந்ததை அடுத்து வீட்டில் இருந்து பெனாயிலை குடித்தவரை மீட்டு கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க