June 17, 2020
தண்டோரா குழு
கோவையைச் சேர்ந்த பிரபல ரவுடி செந்திலை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர்.
கோவை சின்னவேடம்பட்டி அஞ்சுகம் நகரைச் சேர்ந்த ரவுடி செந்தில் என்பவர், மணியகாரன்பாளையம் பஸ் ஸ்டேண்ட் அருகே பெட்டிக்கடை வைத்திருக்கும் தனசேகரன் என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது சம்மந்தமாக கோவை சரவணம்ப்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து செந்திலை கைது செய்தனர். மேலும் புலன் விசாரணையில் செந்தில் மீது கோவை மாவட்டம் மற்றும் மாநகர காவல்நிலையங்களில் 4 கொலை வழக்குகள், 2 கொலை முயற்சி வழக்குகளில் சம்மந்தப்பட்டு இருப்பது தெரியவந்தது .
எனவே குற்றவாளியை வெளியே விடும் பட்சத்தில் கோவை மாநகரம் மற்றும் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைய வாய்ப்பு இருப்பதாக கருதி காவல் ஆய்வாளர் செல்வராஜ், ரவுடி செந்தில் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோவை மாநகர ஆணையருக்கு பரிந்துரை செய்தார் . இதனையடுத்து கோவை மாநகர காவல் ஆணையர் உத்தரவுப்படி ரவுடி செந்தில் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.