• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பிரச்சாரத்தை தீவிரப்படுத்திய மக்கள் நீதி மய்ய வேட்பாளர்

April 1, 2019 தண்டோரா குழு

நாடாளுமன்ற தேர்தலையொட்டி கோவை தொகுதிக்கான மக்கள் நீதி மய்யக் கட்சியின் வேட்பாளர் மகேந்திரன், தனது பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளார்.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரும் 18-ம் தேதி நடக்கிறது. தேர்தல் தேதி நெருங்க நெருங்க அரசியல் கட்சிகள் தங்களது பிரசாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். கோவை நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் மகேந்திரன் போட்டியிடுகிறார். இதையடுத்து, கோவை நாடாளுமன்ற தொகுதிக்குட்ப்பட்ட பகுதிகளில் அவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், மகேந்திரன் இன்று கோவை ரேஸ்கோர்ஸ், துடியலூர் என அடுத்தடுத்து பல்வேறு முக்கிய பகுதியில் பொதுமக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். காலை துடியலூர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர், துடியலூரில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என உறுதியளித்தார்.மேலும், துடியலூர் சந்தையில் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என்றார்.

அதைபோல், மக்கள் நீதி மய்யத்தின் தொண்டர்கள் கட்சியின் கொள்கைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி, மாற்றத்தை உருவாக்க வாய்ப்பு தாருங்கள் எனக் கேட்டுக் கொண்டனர். கோவை வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து கோவையில் வரும் 5-ம் தேதி மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க