• Download mobile app
21 May 2025, WednesdayEdition - 3388
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் பா ஜ க பிரமுகர் மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டம் பாய்ந்தது

September 7, 2020 தண்டோரா குழு

பட்டியல் சமூதாயத்தை சேர்ந்த முதாட்டியை ஏமாற்றி இடத்தை பறித்த பா ஜ க பிரமுகர் மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டம் பாய்ந்தது.

கோவை மதுக்கரை முஸ்லீம் காலனி பகுதியை சேர்ந்த கண்ணாம்மாள். பட்டியல் சமூதாயத்தை சேர்ந்த மூதாட்டியான இவரின் மூன்று சென்று இடத்தில் உள்ள வீட்டை இடித்தும், ஒரு செண்ட் இடத்தை போக்கியம் என்று ஏமாற்றி எழுத்தறிவில்லாத மூதாட்டியிடம் தன்னுடமையாக்கியவர் பாஜக பிரமுகர் ஆறுமுகம். இது தொடர்பாக பின்னர் தெரியவந்த மூதாட்டி மற்றும் அவர் குடும்பத்தார் ஆறுமுகத்திடம் கேட்ட பொது, ஆறுமுகம் மற்றும் அவரின் மனைவி மகன் மூதாட்டி கண்ணாம்மாள் அவரது மகளை தரம் குறைவாக பேசியும், இழிவாக சாதியின் பெயரை சொல்லி திட்டியும், வீட்டை இடித்து கண்ணாம்மாள் மகளையுன் தாக்கியுள்ளனர்.

இது தொடர்பாக மதுக்கரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் ஆரம்பத்தில் மெத்தனமாக செயல்பட்ட காவல் துறை ஊடகத்தில் வெளியான செய்தியின் அடிப்படையில் அழுத்தத்துக்கு உள்ளானது. பின்னர் ஆறுமுகம் மற்றும் அவரின் குடும்பத்தாரின் செயலை விசாரித்த போலிஸார் இந்திய தண்டனை சட்டம் 323- காயம் ஏற்படுத்துதல், 506(1)- கொலை மிரட்டல், 3(1) F- பட்டியல் வகுப்பை சேர்ந்தவரின் வீட்டை இடித்தல், 3(1) S- சாதியின் பெயரை பயன்படுத்தி திட்டுதல் உள்ளிட வன் கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் நிறுபிக்கபட்டால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்புள்ளதாக தெரிகின்றது.

மூதாட்டியை ஏமாற்றி நிலத்த அபகறித்து சாதியின் பெயரை சொல்லி திட்டி வன்கொடுமை செய்த பாஜக பிரமுகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் அவருக்கு கொடுக்கப்படும் தண்டனை இனி ஒருபோதும் இது போன்ற தவறுகள் நிகழாத வண்ணம் அமைய வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பாக இருக்கின்றன.

மேலும் படிக்க