• Download mobile app
10 May 2024, FridayEdition - 3012
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் பாலியல் புகார் கொடுத்த பெண்ணிற்கு பொள்ளாச்சி வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் என கூறிவிடுவோம் என மிரட்டல்

April 4, 2019 தண்டோரா குழு

கோவையில் கபடி பயிற்சி பெற வந்த 19 வயது கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கபடி பயிற்சியாளர் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவையில் கபடி பயிற்சியாளராக இருந்துவரும் விஸ்வநாதன் என்பவரிடம் கோவை ராஜவீதியை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி கபடி பயிற்சி மேற்கொண்டு வருகிறார். மேலும் சில மாணவிகளும் விஸ்வநாதனிடம் பயிற்சி பெற்று வருகின்றனர். இந்நிலையில் பயிற்சியாளர் பயிற்சிக்கு வரும் மாணவிகளை வீட்டிற்கு வரச்சொல்லி வீட்டு வேலைகளில் ஈடுபடுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே பயிற்சியாரின் மகன் சஞ்சீவ்குமார் வீட்டிற்கு வந்த குறிப்பிட்ட மாணவியிடம் சில்மிஷ வேலைகளில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவியின் புகாரின் பேரில் நேரிலும், செல்போனிலும் தவறாக பேசி பாலியல் தொல்லை கொடுத்த கபடி பயிற்சியாளர் மகனான சுந்தராபுரத்தை சேர்ந்த சஞ்சீவ்குமார் என்பவரை போத்தனூர் காவல்துறையினர் கைது செய்தனர். அவரின் மீது (294 பி) பொது இடத்தில் கெட்டவார்த்தையில் பேசுவது, (506(1) கொலை மிரட்டல், பெண்ணை பாலியல் தொல்லைப்படுத்தும் தடுப்பு சட்டம் 2002 ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், புகாரை திரும்பப்பெற கூறி புகார் அளித்த பெண்ணின் வீட்டிற்கு சென்று கைதான நபரின் உறவினர்கள் தகராறு செய்ததாக பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி வெரைட்டி ஹால் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் கைது செய்யப்பட்ட சஞ்சீவ்குமாரின் அப்பா விஸ்வநாதன் மற்றும் அவர் குடும்பத்தினர் கொலை மிரட்டல் விடுப்பதாகவும், பொள்ளாச்சி வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் என கூறிவிடுவோம் என மிரட்டுவதாகவும் கல்லூரி மாணவி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.

மேலும் படிக்க