• Download mobile app
31 Mar 2026, TuesdayEdition - 3702
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பாலியல் தொல்லை செய்த ஆசிரியரை கைது செய்யக்கோரி மாணவர்கள் சாலை மறியல்

December 24, 2021 தண்டோரா குழு

கோவையில் ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்புவதோடு, பள்ளியிலும் பாலியல் தொல்லை தரும் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அரசுப்பள்ளி மாணவர்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை வெள்ளலூர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் கணிணி அறிவியல் ஆசிரியராக விஜய் ஆனந்த் என்பவர் பணியாற்றி வருகிறார். ஆன்லைன் வகுப்புகளும், வழக்கமான வகுப்புகளும் நடைபெற்று நிலையில், மாணவிகள் சிலருக்கு ஆசிரியர் விஜய் ஆனந்த் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

ஆன்லைன் வகுப்புகளின் போது, மாணவிகளுக்கு தனியாக வீடியோ கால் செய்து, டிஷர்ட் அணியுமாறும், வீட்டில் யாரும் இல்லையா எனவும் கூறி தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் வகுப்புகளுக்கு வரும் மாணவிகளை தேவையில்லாமல் தொடுவதோடு, பாடங்களை தாண்டி மாணவிகளுக்கு ஸ்நாக்ஸ் வாங்கி தருகிறேன் என்றெல்லாம் கூறியதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக மாணவிகள், தலைமையாசிரியரிடம் கடந்த வாரம் புகாரளித்த நிலையில், ஆசிரியர் ஒருவாரத்திற்கும் மேலாக பள்ளிக்கு வருகை தரவில்லை. இருப்பினும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால், அதிருப்தி அடைந்த மாணவ மாணவிகள் பள்ளியின் எதிரே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதோடு, பரபரப்பும் நிலவி வருகிறது.

மேலும் படிக்க