• Download mobile app
21 Sep 2026, MondayEdition - 3876
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்த அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர்

March 25, 2019 தண்டோரா குழு

கோவையில் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அலுவலகத்தை அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் திறந்து வைத்தார்.

வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் கோவை நாடாளுமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் வேட்பாளராக மத்திய கயிறு வாரிய தலைவராக இருந்து வந்த சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். இதையொட்டி கோவை அவினாசி சாலையில் பாஜகவின் தேர்தல் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றதை அடுத்து விழாவில் சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக மாநகர் மாவட்ட செயலாளருமான பி.ஆர்.ஜி அருண்குமார், சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ச்சுனன், வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தனர்.

இந்நிகழ்வில் அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்

மேலும் படிக்க