• Download mobile app
05 May 2024, SundayEdition - 3007
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் பாஜக நிர்வாகிகள் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

March 21, 2018 தண்டோரா குழு

கோவையில் பா.ஜ.க மாவட்ட தலைவர் சி.ஆர்.நந்தகுமார் மற்றும் பைனான்சியர் உமாபதி இருவர் வீட்டில் நிறுத்தி வைக்கபட்டு இருந்த கார்களுக்கு மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர்.

கோவை  பா.ஜ.க மாவட்ட தலைவராக இருப்பவர் சி.ஆர்.நந்தகுமார். இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில்,பீளமேட்டில் அவரது வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டு இருந்த இன்னோவா காரிற்கு மர்ம நபர்கள்  தீ வைத்து சென்றனர்.இதில்  காரின் முன் பகுதி எரிந்து சேதமானது.சப்தம் கேட்டு வெளியில் சி.ஆர்.நந்தகுமார் குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியில் வந்து பார்த்த போது கார் எரிந்துள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்து,தண்ணீரை உற்றி  அணைத்துள்ளனர்.

மேலும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், காரின் மீது  மண்ணென்னெய் உற்றி  தீயை பற்ற வைக்கும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.அதிகாலை இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் காரின் மீது எரிபொருளை ஊற்றி பற்ற வைத்துள்ளனர் எனவும் திராவிட இயக்கங்களை சேர்ந்தவர்கள் இதன் பின்னணியில் இருப்பதாகவும் பா.ஜ.க மாவட்ட தலைவர் சி.ஆர்.நந்தகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.

சம்பவ இடத்திற்கு கோவை மாநகர காவல் ஆணையர் பெரியய்யா,துணை ஆணையர் லட்சுமி ஆகியோர் நேரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.புதுக்கோட்டையில் பெரியார் சிலை உடைப்பிற்கு எதிர்வினையாக காருக்கு தீ வைக்கப்பட்டு இருக்கலாம் என்ற  கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை செல்வபுரம் இந்திரா நகரை சேர்ந்தவர் உமாபதி. பைனான்சியரான  இவரது வீட்டின் முன்பு இரு சக்கர வாகனம் மற்றும் மகேந்திரா xuv நிறுத்தப்பட்டு இருந்தது.இந்நிலையில் இன்று அதிகாலை இரு சக்கர வாகனத்தில வந்த அடையாளம் தெரியாத நபர்கள்  இருசக்கர வாகனம் மற்றும் கார் மீது பெட்ரோலை ஊற்றி  தீ வைத்துள்ளனர்.இதில் இரு சக்கர வாகனம் மற்றும் கார் எரிந்து சேதம் அடைந்தது.உடனடியாக வீட்டில்  இருந்த தண்ணீர் ஊற்றி தீயை அணைத்த  உமாபதி சம்பவம் குறித்து செல்வபுரம் காவல் துறையில் புகார் அளித்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செல்வபுரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.முன் விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடைபெற்றதா அல்லது வேறு காரணமா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உமாபதி வீட்டின்  அருகில்  பா.ஜ.க பிரமுகர் வீடு இருப்பதால், அதை குறிவைத்து வந்த நபர்கள் தவறுதலாக உமாபதி வீட்டில் உள்ள வாகனங்கள் மீது தீ வைத்து சென்று இருக்கலாம் என கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த முறை  பெரியார் சிலை உடைக்கப்பட்ட போது பா.ஜ.க அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.இது தொடர்பாக தபெதிக அமைப்பினை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.இந்நிலையில் நேற்று புதுக்கோட்டையில் பெரியார் சிலை உடைக்கப்பட்டதை தொடர்ந்து இந்த சம்பவம் நடந்து இருப்பதால், திராவிடர் இயக்கத்தினர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை துவங்கியுள்ளனர்.

மேலும் படிக்க