September 19, 2020
தண்டோரா குழு
சமீபத்தில் பழைய கட்டிடம் இடிந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் கோவை மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. அதனை தொடர்ந்து, கோவையில் உள்ள பழைய கட்டிடங்கள், பராமரிப்பு இல்லாத கட்டிடங்கள், மற்றும் உயிச்சேதம் விளைவிக்கும் விதமாக உள்ள கட்டிடங்களை இடிக்க மாட்ட ஆட்சியர் கு ராசாமணி உத்திரவு பிறப்பித்தார்.
இந்த நிலையில் கோவை உக்கடம் பகுதியில் உள்ள வரசித்தி விநாயகர் ஆலயத்தை நிர்வகித்து வரும் சரவணகுமார் குடும்பத்திற்கு சொந்தமான கடைகளை சிலர் வாடகைக்கு எடுத்து உள்வாடகைக்கு விட்டுள்ளார்கள். மேலும் கடைகள் மிகவும் பழைய கட்டிடம் என்பதால் தற்பொழுது பெய்துவரும் வடகிழக்கு பருவமழையால் கட்டிடம் இடிந்து உயிர்சேதம் ஏற்படக்கூடாது என்பதற்காக இடத்தின் உரிமையாளர்கள் பழுதான நிலையில் உள்ள கட்டிடத்தை இடிக்க கோவை மாநகராட்சிக்கு ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள், காவல்துறையினர் பாதுகாப்புடன் பழுதடைந்த கடைகளை இடிக்கும் பணியில் ஈடுபட்டார்கள்.
தற்பொழுது கடைவைத்து நடத்திவருபவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் மாநகராட்சி அதிகாரிகளும், போலிசாரும் அவர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து. சுமூக முடிவு எட்டப்பட்டதை தொடர்ந்து மாநகராட்சி ஊழியர்கள் பழுதடைந்த கடைகளை இடித்து அப்புறப்படுத்தினார்கள்.