• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பள்ளி மாணவ மாணவிகளுக்கென பஞ்ச சித்ரா ஓவிய பயிற்சி!

February 20, 2019 தண்டோரா குழு

கோவையில் பள்ளி மாணவ மாணவிகளுக்கென பஞ்ச சித்ரா ஓவிய பயிற்சி பள்ளியானது இன்று துவங்கப்பட்டது.

பொதுவாக ஒவியம் என்பது மக்களிடையே கவரும் வண்ணமாக அமைந்து வருகிறது. இதை தொடர்ந்து இந்தியாவில் முன்னோர்களால் நடைமுறைப்படுத்தப்பட்ட பல்வேறு பொருட்கள் மற்றும் சித்திரங்கள்,வடிவங்களான ஓவியங்கள் அழிந்து வரும் நிலையில் இதனை மீட்டெடுக்கும் வகையில் கோவை சாயிபாபா காலனி பகுதியில் புதியதாக பஞ்ச சித்ரா எனும் ஓவிய பயிற்சிப்பள்ளியானது இன்று துவங்கப்பட்டது.

இதில் பள்ளி மாணவ மாணவிகள் இந்த ஓவிய கலையினை கற்றுக்கொண்டு பாரம்பரியத்தை கடைபிடிக்க வேண்டுமென்றும் நடைமுறையில் கொண்டு வரவேண்டுமெண்டும் ஆரம்பிக்கப்பட்டது. இதன் மூலம் பொதுமக்கள் அனைவரும் பயன் படுத்தி கொண்டு தங்களது திறமைகளை ஒவியத்தின் மூலம் ஆஸ்கார் விருதை அடையக் கூடிய ஒரு வாய்ப்பாக இருக்கும் என்றனர். இந்த துவக்க விழாவில் டெல்லியில் உள்ள லலித் அகடாமியின் முன்னாள் தலைவர் பாஸ்கரன் ,மற்றும் கோவை போக்குவரத்து துணை ஆணையாளர் சுஜித்குமார், வராகி சுவாமிகள், பஞ்ச சித்ரா அகடாமி நிறுவனர் பருதி ஞானம் , மற்றும் ஓவிய பள்ளி மாணவ மாணவியர் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

மேலும் படிக்க