October 10, 2020
தண்டோரா குழு
கோவை காந்திபுரம் ரயில் நிலையம் சாய்பாபா காலனி,கவுண்டம்பாளையம், துடியலூர், மருதமலை,தொண்டாமுத்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக சாரல் மழை பெய்து வருகிறது.இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நிலையில் பகல் 2 மணி முதல் கோவை சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.இதமான காலநிலையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ள நிலையில் பல்வேறு பயிர்களை நடவு செய்துள்ள விவசாயிகள் இந்த மழையால் நிம்மதி அடைந்துள்ளனர்.