June 30, 2020
தண்டோரா குழு
கோவை அரசு மருத்துவமனை பயிற்சி மருத்துவர், ஒரு வயது பெண் குழந்தை உட்பட 25 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
கோவையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 65 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் இன்று மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
கோவை அரசு மருத்துவமனையில்பணியாற்றும் 24 வயது பெண் பயிற்சி மருத்துவருக்கு கோரோனா தொற்றுஏற்பட்டுள்ளது. இடையர்பாளையம் பகுதியை சேர்ந்த கொரோனா தொற்று பாதித்த பெண்ணின் ஒரு வயது குழந்தைக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
மேலும், தெலுங்குபாளையம் பகுதியில் 5 வயது ஆண் குழந்தை உட்பட 3 பேர், செட்டி வீதி பகுதியை சேர்ந்த 3 பேர், துடியலூர் பகுதியை சேர்ந்த 3 பேர், போத்தனூரை சேர்ந்த 2 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.
மேலும் ஆர்.எஸ்.புரம், மசக்காளிபாளையம், மதுக்கரை, பிரஸ் காலணி, வெள்ளக்கிணறு பிரிவு, சுண்டாக்காமுத்தூர், பாப்பநாய்க்கன்பாளையம், பீளமேடு, தெலுங்கு வீதியில் தலா ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து,கோவை இஎஸ்ஐ மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 275 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேசமயம், இன்று ஒரு ஆண் குழந்தை, 7 பெண்கள், 5 ஆண்கள் என 13 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.