September 21, 2020
தண்டோரா குழு
தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வரும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு துணைத் பொது தேர்வில்,கோவை மாவட்டத்தில் 1055 மாணவர்கள் எழுதுகின்றனர்.
மார்ச் மாதம் முடிந்த 12 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. அதே கரோனாவால் நடைபெறாத 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் ஆல் பாஸ் போடப்பட்டது. இந்நிலையில் தனி தேர்வாளர்களுக்கான துணை பொதுத்தேர்வு குறித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதன் படி இன்று துவங்கும் துணைப் பொதுத்தேர்வுகள் வரும் அக்டோபர் 7 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இன்று துவங்கிய 10 ஆம் வகுப்பு துணைத்தேர்வை கோவை மாவட்டத்தில் புது பாடத்திட்டத்தில் 9 மையங்களில் 256 பேரும், பழைய பாடத்திட்டத்தில் 7 மையங்களில் 799 பேரும் எழுதுகின்றனர்.
தேர்வுக்கு வரும் மாணவர்கள் கட்டாய முகக்கவசம் அணிய வலியுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்களிடையே கூடுதல் இடைவெளி விடப்பட்டுள்ளது. தேர்வுகளை கண்காணிக்கவும், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.