• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பணி நீக்கம் செய்யப்பட்ட சாலை பணியாளர்கள் தண்டோரா அடித்து ஆர்பாட்டம்

April 30, 2019 தண்டோரா குழு

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பணி நீக்கம் செய்யப்பட்ட சாலை பணியாளர்கள் கோவை திருச்சி சாலையிலுள்ள நெடுஞ்சாலை துறை அலுவலகம் முன்பாக தண்டோரா அடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலைப்பணியாளர்களின் பணிநீக்கம் செய்யப்பட்ட காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும், பணி நீக்க காலத்தில் இறந்துபோன ஊழியர்களின் வாரிசுகளுக்கு விதிமுறையை தளர்த்தி வாரிசு பணி வழங்கிட வேண்டும், சாலைப் பணியாளர்களுக்கு நிரந்தர ஊதியம் நடைமுறைகளை வழங்கிட வேண்டும் முதலமைச்சர் கட்டுப்பாட்டில் இருக்கும் நெடுஞ்சாலை துறையில் சாலை பணியாளர்களை வஞ்சிக்கப்படும் நிகிழ்ச்சியாக இது இருக்கிறது என குற்றம் சாட்டியுள்ள சாலைப்பணியாளர்கள் இன்று தமிழகம் முழுவதும் 7 கண்காணிப்பு பொறியாளர் அலுவலகங்கள் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் ஒரு பகுதியாக கோவை திருச்சி சாலையில் அமைந்துள்ள நெடுஞ்சாலை துறை அலுவலகம் முன்பாக தண்டோரா அடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி தண்டோரா அடித்து கோஷங்களை எழுப்பிய அவர்கள் தமிழக அரசாங்கம் தங்கள் கோரிக்கையை ஏற்காவிட்டால் வருகிற மே மாதம் 28ம் தேதி சென்னையிலுள்ள நெடுஞ்சாலை துறை முதன்மை இயக்குனர் அலுவலகத்தில் சாலை பணியாளர்கள் குடும்பத்தோடு கோரிக்கைக்கான அரசாணை வரை உள்ளிருப்பு போராட்டத்தை நடத்துவோம் என்றும் தமிழக முதலமைச்சர் தங்களை அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் தெரிவித்தனர்.

மேலும் படிக்க