July 25, 2020
தண்டோரா குழு
கோவை மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஹோமியோபதி மாத்திரைகள் வழங்கப்பட்டது.
கோவை மாவட்டத்தில் நாளுக்கு நாள்
கொரோனா நோய் தொற்று அதிகரித்து வருவதை தொடர்ந்து தொற்றை தடுக்கும் விதமாக மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் கொரோனா நோய் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் முகாம் அமைத்து ஹோமியோபதி மாத்திரைகள் கொடுக்கப்பட்டு வருகிறது.
இதன்படி கோவை ரத்தினபுரி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு ஹோமியோபதி நோய் எதிர்ப்பு மாத்திரைகளை கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் பி ஆர் ஜி அருண்குமார் மற்றும் முன்னாள் மாமன்ற உறுப்பினர் பிரபாகரன் உதவி ஆய்வாளர் ஆகியோர் வழங்கினர்.இந்த மாத்திரைகள் எடுத்துக் கொண்டவர்கள் எவருக்கும் நோய் பாதிப்பு ஏற்பட்டதில்லை என்று மருத்துவர்களின் ஆய்வு குறிப்பிடுவதாக தெரிவித்து உள்ளனர்.