May 18, 2020
தண்டோரா குழு
கோவையில் நேற்று பெய்த கன மழையில் வீடுகள் இடிந்து விழுந்து சேதமடைந்தன.
கோவையில் நேற்று பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. கனமழையின் காரணமாக, கோவை டவுன்ஹால் பகுதியில் போக்குவரத்து சிக்னல் வேரோடு சாய்ந்தது. வடகோவை மேம்பாலத்தில் மின்கம்பம் சாய்ந்து விழுந்தது.
குளக்கரையில் அமைக்கப்பட்ட இரும்பு வேலிகள் சாய்ந்து பெயர்ந்து விழுந்தகுளக்கரையில் அமைக்கப்பட்ட இரும்பு வேலிகளும் பெயர்ந்து விழுந்தது.
இச்சம்பவங்களினால் உயிரிழப்புகள் ஏற்படாத நிலையில்,தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட கரும்புக்கடை,முத்து காலனி மற்றும் சேரன் நகர் பகுதிகளில் தென்னை மரங்கள் விழுந்து வீடுகள் இடிந்தது, இதேபோல் வீசிய பலத்த காற்றுக்கு ஓடுகள் பெயர்ந்து வீடுகள் சேதம் அடைந்தது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள், பாதிப்பை சீர் செய்ய கோவை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா என காத்திருக்கின்றனர்.