• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் நூதன முறையில் தங்கம் திருட்டு

December 19, 2019

கோவை டவுன்ஹால் பகுதியில் தங்க நகை வியாபாரி சின்னய்யா என்பவரிடம் இருந்து அடையாளம் தெரியாத நபர்கள் 650 கிராம் தங்கம் நகையை கொள்ளையடித்து சென்றனர்.

பொள்ளாச்சியை சேர்ந்த சின்னையா என்பவர் கோவையில் 650 கிராம் தங்கத்தை வாங்கிக் கொண்டு இன்று பொள்ளாச்சி திரும்பிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது உக்கடம் அருகே போலீசார் என கூறி சின்னையாவின் உடமைகளை இருவர் சோதனையிட்டு விட்டு கடந்து சென்றுள்ளனர். மீண்டும் சின்னய்யா தனது பையை பார்த்த போது அதில் இருந்த 650 கிராம் தங்க கட்டிகள் திருட்டு போயிருப்பது தெரியவந்துள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த நகைவியாபாரி சின்னையா கோவை பெரியகடை வீதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க