• Download mobile app
02 May 2024, ThursdayEdition - 3004
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் நிறுவனத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில் ரெய்டு நடந்துள்ளது – உரிமையாளர் பேட்டி

April 12, 2019 தண்டோரா குழு

போட்டோகிராபி நிறுவனத்தில் வருமான வரித்துறையினரின் சோதனை முடிவடைந்தது. நிறுவனத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில் சோதனை நடந்துள்ளதாக உரிமையாளர் கூறியுள்ளார்.

கோவையில் உள்ள போட்டோ கிராபி நிறுவனத்தில் பணம் பதுக்கி வைத்ததாக வந்த சோதனையின் அடிப்படையில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனை முடிவடைந்தது. நிறுவனத்தில் இருந்து எந்த வித ஆவணமும், பணமும் கைப்பற்றவில்லை என நிறுவனத்தின் உரிமையாளர் தெரிவித்து உள்ளார்.

கோவை திருச்சி சாலை ஏர் இந்தியா பேருந்துநிலையம் அருகில் ஜிரோ கிராவிட்டி போட்டோகிராபி என்ற தனியாருக்கு சொந்தமான புகைப்பட நிறுவனம் செயல்பட்டு வருகிறது. சென்னை கோவை உட்பட நான்கு இடங்கள் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த நிறுவனத்தில் பணம் பதுக்கி வைக்கப்படிருப்பதாக தகவல் கிடைத்ததன் அடிப்படையில் வருமான வரித்துறை, அதிகாரிகள் , தேர்தல் பறக்கும் படை மற்றும் காவல்துறையினருடன் அந்நிறுவனதில் சோதனை செய்தனர்.இந்நிலையில் காலை 11 மணி அளவில் இரண்டு வாகனங்களில் வந்த 7 வருமான வரித்துறை அதிகாரிகள் , தங்கள் சோதனையை துவங்கினர். ஆறு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த சோதனை மாலை முடிவடைந்தது. இதனையடுத்து வருமான வரித்துறையினர் புறப்பட்டு சென்றனர்.

பின்னர் அந்த நிறுவனத்தின் உரிமையாளர் அஜய் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர்,

கடந்த வாரம் தங்களது நிறுவனத்தில் பணிபுரிந்த இருவர் ஒழுங்கு நடவடிக்கையின் மூலமாக பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு இருந்ததாகவும், அவர்கள் தான் தங்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில் இதுபோன்று தவறான தகவலை பரப்பு உள்ளதாக கூறினார்.
மேலும்,சோதனையின் காரணமாக தங்களது வேலை பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், இது குறித்து காவல் துறையிடம் புகார் அளிக்க உள்ளதாக கூறினார். அதைபோல் தங்களது நிறுவனத்தில் இருந்து எந்த வித, ஆவணமும், பணத்தையும் அதிகாரிகள் கைப்பற்றவில்லை எனவும் அவர் கூறினார்.

மேலும் படிக்க