• Download mobile app
23 Apr 2024, TuesdayEdition - 2995
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் நாய்களை துரத்தும் யானை

November 13, 2019

கோவை துடியலூரை அடுத்த கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் நள்ளிரவில் 6 காட்டு யானைகள் கூட்டம் குடியிருப்புப் பகுதிகளில் சர்வசாதாரணமாக உலாவருவது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை துடியலூர் அடுத்த கதிர் நாயக்கன்பாளையம் லட்சுமி நகர் பேஸ் 3 பகுதியில் நேற்று நள்ளிரவில் சுமார் 6 யானைகள் கொண்ட காட்டு யானை கூட்டம் குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளில் வந்ததுள்ளது. யானைகளை பார்த்து அங்கிருந்த தெரு நாய்கள் குறைத்ததால் அதில் கோபம் கொண்ட ஒரு ஆண் யானை நாய்களை துரத்திய காட்சியும் அதனைத் தொடர்ந்து அதனுடன் வந்திருந்த இரண்டு குட்டிகளுடன் கூடிய 5 யானைகள் பின்னால் சென்றதும் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

நாய்கள் குறைத்த சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் வெளியே வந்து பார்த்தபோது 6 யானைகள் கொண்ட கூட்டம் குடியிருப்பு பகுதிகளில் சர்வசாதாரணமாக சென்றதைக் கண்டு மிகுந்த அச்சம் அடைந்தனர்.

இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த வனத்துறையினர் நள்ளிரவில் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியினை மேற்கொண்டனர்.

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது,

காட்டு யானைகள் மலைப்பகுதியில் இருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள இப்பகுதிக்கு உணவு தேடி வருகிறது. எனவே வனப்பகுதியில் அதற்கான உணவுகளை ஏற்பாடு செய்து விட்டால் அவைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் வராது என்றும் உயிரிழப்புகள் ஏற்படும் முன் வனப்பகுதிகளில் இருந்து யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் வராமல் தடுக்க வனத்துறையினர் வன எல்லைகளில் அகழிகள் அமைத்து தடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

மேலும் படிக்க