• Download mobile app
24 May 2025, SaturdayEdition - 3391
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் நான்கு நாள் முழு ஊரடங்கிற்கு பிறகு கடைகள் திறக்கப்பட்டுள்ளதால் மக்கள் கூட்டம்

April 30, 2020 தண்டோரா குழு

நான்கு நாட்கள் முழு ஊரடங்கிற்கு பிறகு கடைகள் திறக்கப்பட்டுள்ளதால் மக்கள் கூட்டம் அதிகரித்திருகிறது. மேலும் காய்கறிகளின் விலையும் உயர்ந்திருக்கிறது.

சென்னை, மதுரை, கோவை மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு நேற்றுடன் நிறைவடைந்தது. இதனையடுத்து இந்த 3 மாநகராட்சிகளில் காய்கறிகள், மளிகை கடைகளுக்கு இன்று (வியாழக்கிழமை) மட்டும் கூடுதல் நேரம் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. நாளை (வெள்ளிக்கிழமை) முதல் பழைய நடைமுறையில் ஊரடங்கு தொடரும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று காந்திபுரம் பேருந்து நிலையத்தில் செயல்படும் காய்கறி சந்தையில் மக்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. காய்கறிகளின் விலையும் 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை உயர்ந்து காணப்பட்டது. சின்னவெங்காயம் 50 ரூபாயிலிருந்து 70 ரூபாய்க்கும், தக்காளி 10 ரூபாயிலிருந்து 30 ரூபாய்க்கும் , கத்தரி 30 ரூபாயிலிருந்து 40 ரூபாய்க்கும் விற்கப்பட்டு வருகிறது. உழவர் சந்தைக்கும் , காய்கறி மார்க்கெட்டுக்கும் இடையே விலை வித்தியாசம் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. நான்கு நாட்களுக்கு பின் அத்தியவாசிய பொருட்களின் கடைகள் திறக்கப்பட்டுள்ளதால் மக்கள் வரிசையில் தனைமனித இடைவெளியை கடைபிடித்து வாங்கிச்செல்கின்றனர்.

மேலும் படிக்க