• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் நள்ளிரவில் மாயமான வருமான வரித்துறை துணை ஆணையர்

October 16, 2017 தண்டோரா குழு

கோவை மாவட்ட வருமான வரித்துறை துணை ஆணையர் சிவக்குமாரைக் காணவில்லை என அவரது உறவினர்கள்காவல்நிலையத்தில் கொடுத்துள்ள புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்ட வருமான வரித்துறைத் துணை ஆணையர் சிவக்குமார். இவர் கோவை கொடிசியாவை அடுத்து உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 13-ம் தேதி இரவு வீட்டிலிருந்த சிவக்குமார் காலையில் இல்லாததால் அவர் மனைவி அதிர்ச்சியடைந்துள்ளார்.

எனினும்,அவரது செல்ஃபோன் உள்ளிட்ட எலெக்ட்ரானிக் பொருள்கள் வீட்டில் தான் இருந்துள்ளது. இதனால் சிவகுமார் எங்கே போனார் என்ன ஆனார் என்று தெரியாமல் அவரின் குடும்பத்தினர் தேடி வந்தனர்.இதையடுத்து அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள சி.சி.டிவி காட்சிகளைப் பார்த்துள்ளனர்.

அதில் நள்ளிரவில் சிவக்குமார் சிறிய பெட்டியோடு வீட்டைவிட்டு வெளியேறும் காட்சிப் பதிவாகியுள்ளது.இதனை தவிர வேறெந்தத் தகவலும் தெரியவரவில்லை.

இதனைத்தொடர்ந்து, சிவக்குமாரைக் காணவில்லை என அவரின் சகோதரர் ராம்குமார் கோவை பீளமேடு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.இந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் படிக்க