• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் நன்றாக படித்ததால் இலவச விமான பயணத்திற்கு புறப்பட்ட மாணவர்கள் !

April 22, 2019 தண்டோரா குழு

கோவையில் ஆதரவற்ற ஒழுக்கமாக, நன்றாக படிக்கும் குழந்தைகளை இலவச விமான பயணம் மூலம் பெங்களூரு 4 நாட்கள் சுற்றுலா பயணம் கூட்டி செல்கின்றனர்.

கோவை பீளமேடு பகுதியில் பிஎஸ்ஜி கல்வி நிறுவனமானது அமைந்துள்ளது. இங்கு ஆதரவற்ற குழந்தைகளுக்கு படிப்பு செலவுக்கான பீஸ் மற்றும் அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து வருகின்றனர். கல்வி நிறுவனத்தில் உள்ளே பிஎஸ்ஜி அறக்கட்டளை சார்பாக மாணவர்கள் இல்லம் என்ற விடுதியை அமைத்து சுமார் 100 மாணவர்களை கொண்டு கல்வி தரத்தினை சிறப்பாக அமைத்து வருகின்றனர். இதில் நன்றாக படித்து , ஒழுக்கமாக உள்ள முதல் மதிப்பெண்களை பெற்ற ஆதரவற்ற 7 மாணவர்களை முதன்முறையாக விமானம் மூலம் பெங்களூர், மைசூர் , நகரங்களை சுற்றி பார்க்கும் விதமாக பிஎஸ்ஜி குடும்பங்களின் தலைவர் கோபால கிருஷ்ணனின் ஆலோசனையின் பேரில் முதன் முறையாக ஆகாயத்தில் பறக்கும் விமானத்தின் மூலம் ஒரு வாரம் சுற்று பயணம் மேற்கொள்ள அழைத்து
செல்கின்றனர்.

இதன் மூலம் அவர்கள் மகிழ்ச்சியடைவதோடு மட்டுமல்லாமல் மற்ற மாணவர்களுக்கும் அறிவுத்திறனை வளர்ப்பதற்கு ஒரு ஊக்கம் கருவியாக இருக்கும் என்ற நோக்கத்தோடு இருப்பதாக தெரிவித்தனர்.

மேலும் படிக்க