• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் நடைபெற இருந்த கிராமசபைக் கூட்டம்‌ ரத்து

October 2, 2020 தண்டோரா குழு

கொரோனா வைரஸ்‌ தொற்று பரவலை தவிர்க்கும்‌ பொருட்டு, கோவை மாவட்டத்தில்‌ இன்று நடைபெற இருந்த கிராமசபைக் கூட்டம்‌ ரத்து செய்யப்படுகிறது,என மாவட்ட ஆட்சித்தலைவர்‌ கு.இராசாமணி தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில்‌, அக்டோபர்‌ 2 ஆம்‌ தேதி, தேசத்தந்தை அண்ணல்‌ காந்தியடிகளின்‌ பிறந்த தினத்தினை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும்‌ ஊரகப்‌ பகுதிகளில்‌ கிராம சபைக்கூட்டங்கள்‌ நடத்தப்பட்டு வருகின்றது.அவ்வாறு இன்று (02.10.2020) நடைபெறவிருந்த கிராமசபைக்‌ கூட்டம்,‌ கொரோனா வைரஸ்‌ தொற்று பரவலை தவிர்க்கும்‌ பொருட்டு ரத்து செய்யப்படுகின்றது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, மாவட்ட ஆட்சியர்‌ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்‌ தெரிவித்துள்ளதாவது:

ஆண்டுதோறும்‌ அக்டோபர்‌ 2 ஆம்‌ தேதியன்று தேசத்தந்தை அண்ணல்‌ காந்தியடிகளின்‌ பிறந்த தினத்தினை முன்னிட்டு, ஊரக வளர்ச்சித்துறையின்‌ மூலம்‌ கோவை மாவட்டத்தில்‌ உள்ள 228 ஊராட்சிகளிலும்‌ கிராம சபைக்கூட்டங்கள்‌ நடத்தப்பட்டு வருகின்றது. கொரோனா வைரஸ்‌ தொற்று பரவலை தவிர்க்கும்‌ பொருட்டும்‌, கிராமப்புற பொதுமக்களின்‌ நலன்‌ கருதியும்,‌ தமிழகம்‌ முழுவதும்‌ இன்று நடைபெறவிருந்த கிராமசபைக்கூட்டம்‌ ரத்து செய்யபடுவதைத்‌ தொடர்ந்து, கோவை மாவட்டத்திலும்‌ இன்று நடைபெற இருந்த கிராமசபைக் கூட்டம்‌ ரத்து செய்யப்பட்டுள்ளது, என்று அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க