• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான மினி மாரத்தான்

January 5, 2019 தண்டோரா குழு

கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கென பல்வேறு பிரிவுகளில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.

கோவையில் பன்முகத்தன்மையை ஊக்குவிக்கும் வகையில் தொடர்ந்து நான்காவது ஆண்டு மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. கோவை மேற்கு ரோட்டரி சங்கம் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பாக நடைபெற்ற இதில் கண் பார்வையற்றோர், காது கேளாதோர்,மாற்றுத்திறனாளிகள் மாணவர்கள்,பொதுமக்கள் என ஐந்து பிரிவுகளாக நடைபெற்றது.

கோவை வேளாண்மை பல்கலைகழக மைதானத்தில் துவங்கிய இப்போட்டியை கோவை வேளாண்மை பல்கலைகழக துணை வேந்தர் முனைவர் குமார் மற்றும் மேற்கு ரோட்டரி தலைவர் சசிகுமார் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். இதில் மாற்றுத்திறனாளிகள் தங்களது வீல் சேரில் சீறிப்பாய்ந்து சென்றது பார்வையளார்களை வியப்பில் ஆழ்த்தியது.

இறுதியில் வெற்றி பெற்ற அனைவர்க்கும் ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

மேலும் படிக்க