• Download mobile app
31 Mar 2026, TuesdayEdition - 3702
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் நடைபெற்ற பாரதியார் நினைவு நூற்றாண்டு விழா கொண்டாட்டம்

December 13, 2021 தண்டோரா குழு

கோவையில் தனியார் கல்லூரியில் கஜானந்தா அறக்கட்டளை மற்றும் தி சென்னை சில்க்ஸ் சார்பில் பாரதியார் நினைவு நூற்றாண்டு நாட்காட்டி வெளியீட்டு விழா நடைபெற்றது.

கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் கஜானந்தா அறக்கட்டளை மற்றும் தி சென்னை சில்க்ஸ் நிறுவனம் சார்பில் பாரதியார் நினைவு நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பங்கேற்ற பிரபல பேச்சாளரும் பேராசிரியருமான பர்வீன் சுல்தானா பாரதியாரின் ஞானம், தேசத்தில் பாரதி ஆகிய தலைப்புகளில் சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் மற்றும் பேச்சாளரும் எழுத்தாளருமான பாரதி கிருஷ்ணகுமார் பாரதியார் நினைவு நூற்றாண்டு நாட்காட்டியை வெளியிட்டனர். நிகழ்ச்சியில் மாணவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு பாரதியார் புத்தகங்கள் வழங்கப்பட்டன.

மேலும் படிக்க