• Download mobile app
04 May 2024, SaturdayEdition - 3006
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் நடைபெற்ற பள்ளிகளுக்கு இடையேயான சிறந்த பேண்டு வாத்திய குழு போட்டி

November 5, 2023 தண்டோரா குழு

கோவையில் நடைபெற்ற பள்ளிகளுக்கு இடையேயான சிறந்த பேண்டு வாத்திய குழு போட்டியில் பள்ளி மாணவ, மாணவிகள் பேண்டு வாத்திய இசையுடன் நடத்திய அணிவகுப்பு பார்வையாளர்களை கவர்ந்தது.

கடந்த 1944 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் சமூகம் சார்ந்த பல்வேறு சமுதாய நல பணிகளை செய்து வருகிறது..மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் கலை மற்றும் விளையாட்டுப் போட்டிகளையும் நடத்தி வருகிறது.அதன் ஒரு பகுதியாக, கடந்த 22 வருடங்களாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள பள்ளி மாணவ மாணவியர் பங்கேற்கும் பேண்ட் வாத்திய போட்டியை வெற்றிகரமாக நடத்தி வருகிறது.

இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டுக்கான பேண்டு வாத்திய போட்டி அவினாசி சாலையில் உள்ள மணி மேல்நிலை பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. இதில் 17 பள்ளிகளில் இருந்து பேண்டு வாத்திய குழு மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். முன்னதாக போட்டிகளை,. ரோட்டரி 3201 மாவட்டத்தின் 2024 – 25 ஆம் ஆண்டுக்கான ஆளுநர் மூத்த வழக்கறிஞர் ரொட்டேரியன் ஏ கே எஸ் சுந்தர்வடிவேலு துவக்கி வைத்தார்.

போட்டியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் வண்ண மயமான பேண்டு வாத்திய சீருடை அணிந்தபடி, போட்டியில் தங்கள் இசைத் திறமை, உடல் வலிமை மற்றும் ஒழுக்கத்தை நேர்த்தியாக வாசித்து அணிவகுப்பு நடத்தினர்.இதில் நடுவர்களாக பி ஆர் எஸ் பேண்ட் மாஸ்டர்கள் கலந்து கொண்டு சிறந்த குழுவினரை தேர்வு செய்தனர்.கலப்பு,மற்றும் மாணவர் குழு,மாணவியர் குழு என மூன்று பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில்,கலப்பு பிரிவில் பிஷப் பிரான்சிஸ் பள்ளி ,மாணவியர் பிரிவில் அவிலா கான்வெண்ட் ,மாணவர் பிரிவில் லாரன்ஸ் பள்ளி ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.

தொடர்ந்து முறையே முதல்,இரண்டாம் மற்றும் மூண்றாமிடம் பிடித்த பேண்ட் வாத்திய குழுவினருக்கு ரொக்க பரிசு கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை சிறப்பு விருந்தினர் சுந்தரவடிவேலு வழங்கி கவுரபடுத்தினார்.நிகழ்ச்சியில், ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் தலைவர் விஜய் ,செயலாளர் பாலசுப்ரமணியன், சேர்மன் குணசேகரன் உட்பட ரோட்டரி சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க