• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் நடைபெற்ற தேசிய மக்கள் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம்

January 8, 2021 தண்டோரா குழு

கோவையில் நடைபெற்ற தேசிய மக்கள் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் கூட்டணி கட்சிகளை ஆதரித்து பிரச்சாரம் செய்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தேசிய மக்கள் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் கோவை ரேஸ் கோர்சில் உள்ள சீமா அரங்கில் நடைபெற்றது.கட்சியின் மாநில செயல் தலைவர் மேஷாக் ராஜா தலைமையில் நடைபெற்ற இதில் மாநிலத்தலைவர் சசிகலாவின் முன்னிலை வகித்தார்.சென்னை மதுரை திருச்சி சிவகாசி திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்ட இதில் வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் கூட்டணி அமைப்பது குறித்த ஆலோசனை நடைபெற்றது.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாநில தலைவர் சசி கார்வின்,

விரைவில், தமிழகத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களையும் திரட்டி மாநில அளவில் மிகப்பெரிய மாநாடு நடத்துவது எனவும், வரும் சட்டமன்றத் தேர்தலில் தங்களுடைய கட்சி கூட்டணி அமைக்கக்கூடிய அணிக்கு ஆதரவாக 234 தொகுதிகளிலும் தேசிய மக்கள் கட்சியின் பொறுப்பாளர்கள் கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் ஜெயராமன், மாசிலாமணி, எபனேசர், அன்சாரி, பால் பர்னபாஸ் போவர்ட் ரெக்லஸ் சுந்தர், பிரபு ,உட்பட மாவட்ட மண்டல நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க