November 25, 2021
தண்டோரா குழு
கோவையில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தக்காளி பரிசு வழங்கி மணமக்களை ஆச்சரியப்படுத்திய விஜய் மக்கள் இயக்கத்தினர்.
கோவை மாவட்ட விஜய் மக்கள் இயக்க இளைஞரணி துணை தலைவராக இருப்பவர் மகேஷ்வரன்.இந்நிலையில் இவரது திருமண வரவேற்பு நிகழ்ச்சி கோவை குறிச்சி பிரிவு பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட விஜய் மக்கள் இயக்க மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் திடீரென மணமக்களுக்கு தக்காளி பரிசு வழங்கி ஆச்சரியப்படுத்தினர்.இது வரை இல்லாத அளவிற்கு தக்காளியின் விலை உயர்ந்துள்ள நிலையில் மணமக்களுக்கு தக்காளி வழங்கிய வீடியோ தற்போது பெரும் வைரலாகி வருகிறது.