• Download mobile app
08 Nov 2025, SaturdayEdition - 3559
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் நடைபெற்ற தனியார் கல்லூரி கலை போட்டி விழா

February 21, 2019 தண்டோரா குழு

கோவையில் நடைபெற்ற தனியார் கல்லூரி கலை போட்டி விழாவில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் நயா 2K19 எனும் கல்லூரி கலை விழா நடைபெற்றது.இதில் கோவையில் உள்ள கலை அறிவியல் கல்லூரிகளுக்கு இடையேயான கலாசாரம் மற்றும் அறிவுத்திறன் மேம்படுத்துவது குறித்த போட்டிகள் நடந்தன. இதில் மோனோ ஆக்டிங், உவமைநாடகம், குழுப்போட்டி,கலாசார நடனம், சோலோ நடனப்போட்டிகள் நடைபெற்றன.

மேலும் மாணவர்கள் உருவாக்கிய கேளிக்கை, கற்று கொள்ளல்,ஆச்சரியம் போன்றவற்றை வெளிப்படுத்தும் குறும்படங்கள் போட்டிகள் நடத்தப்பட்டு,அதில் சிறந்தவை தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. முன்னதாக இவ்விழாவை கல்லூரி இணைசெயலர் சந்தியா ராமச்சந்திரன் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். தென்னிந்திய பகுதகளில் இருந்து 25 க்கும் மேற்பட்ட கல்லூரிகளை சேர்ந்த 200 க்கும் அதிகமான மாணவ,மாணவிகள் மற்றும் கோவையில் உள்ள பல்வேறு கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.

மேலும் படிக்க