• Download mobile app
08 Apr 2026, WednesdayEdition - 3710
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் நடைபெற்ற சாட்டையடி திருவிழா – பரவசத்தில் ஆழ்ந்த பக்தர்கள்

December 14, 2022 தண்டோரா குழு

கோவையை அடுத்த பூசாரிபாளையம் பகுதியில் 300ஆண்டுகள் பழமை வாய்ந்த அடைக்கலம்மன் கோவில் அமைந்துள்ளது.

ஆற்றில் இருந்து உருவாகிய இந்த அம்மனை முன்னோர்கள் முதல் ஆண்டு தோறும் திருவிழாவை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.அந்த வகையில் இந்த ஆண்டு கோவில் திருவிழா கடந்த 4ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.இதனையடுத்து அம்மன் திருக்கலாயணம், அபிஷேகம்,பிடிமன் எடுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதன் தொடர்ச்சியாக இன்று மேல தாலங்களுடன் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை என பக்தர்கள் தங்களது மீது சாட்டையை சுழற்றி அடித்து கொண்டு ஆற்றங்கரையில் இருந்து அம்மனை கோவிலுக்கு அழைத்து வந்தனர்.இந்த சாட்டையடி திருவிழா மூலம் தங்களது நேர்த்தி கடனை செலுத்தியது பக்தர்களிடையே பரவசத்தில் ஆழ்த்தியது.

மேலும் படிக்க