• Download mobile app
10 May 2025, SaturdayEdition - 3377
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் நடைபெற்ற க்ராஸ் ரோடு பைக் பந்தயம்

February 27, 2018 தண்டோரா குழு

கோவையில் நடைபெற்ற க்ராஸ் ரோடு பைக் பந்தயத்தில் ஆண்கள் மட்டுமல்லாது பெண்களும் கலந்து கொண்டு பைக் ஓட்டியது பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது.

கோவையில் தேசிய அளவிலான, ஜே.ஆர்.டி ‘சூப்பர் கிராஸ்’ முதலாவது பைக் ரேஸ் போட்டிகள், பல்வேறு சுற்றுகளாக நடைபெறுகிறது.இதன்  முதல் சுற்று போட்டிகள் கோவையை அடுத்த கள்ளப்பாளையத்தில்  நடைபெற்றது. போட்டிகளுக்காக, சாதரணமாக மைதானத்தில், பிரத்யேக மண் மேடுகள், வளைவுகள் அமைக்கப்படும்,ஆனால் இதில் எந்த விதமான மாற்றங்களும் பாதையில் செய்யாமல் கரடு முரடான சாலையில்  வீரர்கள் அப்படியே ஓட்டி செல்ல வேண்டும்

மேலும்,குறிப்பிட்ட நேரத்தில் குறித்த தூரத்தை கடப்பவர்கள் அடுத்த சுற்றுக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என போட்டியின் ஒருங்கிணைப்பாளர் கமலக்கண்ணன் மற்றும் சரவணக்குமார் தெரிவித்தனர்.

ஜூனியர் எஸ்.எக்ஸ்., இந்தியன் எக்ஸ்பெர்ட் கிராஸ், 5×1 உட்பட, ஒன்பது பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில், கோவை, மதுரை, திருச்சி, சென்னை மற்றும் கேரளா, கர்நாடகா, அரியானா, டில்லி, மும்பை உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த, 100 க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.இதில் குறிப்பாக பெண்களும் கலந்து கொண்டு பைக்குகளில் சீறிப்பாய்ந்தனர்.இந்த பந்தயத்தில் ஆண்களுக்கு நிகராக  பெண்களும் பைக் ஓட்டியது பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது.

மேலும் படிக்க