• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் நடைபெற்ற இமானுவேல் சேகரனார் குரு பூஜை விழா

September 11, 2020 தண்டோரா குழு

கோவையில் நடைபெற்ற இமானுவேல் சேகரனார் குரு பூஜை விழாவில் அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ்,பா.ஜ.க உட்பட பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டு அவரது படத்திற்கு மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தினர்.

இந்திய சுதந்திர போராட்ட களத்தில் வெள்ளையனே வெளியேறு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டவர் தியாகி இம்மானுவேல் சேகரன். இவரது 63 ஆம் ஆண்டு குரு பூஜை விழா கோவையில் அகில இந்திய மள்ளர் எழுச்சி பேரவை சார்பாக புலிய குளம் பகுதியில் நடைபெற்றது.பேரவையின் தலைவர் மனு நீதி சோழன் தலைமையில் நடைபெற்ற விழாவில் அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.இதில் அங்கு வைக்கப்பட்டிருந்த இம்மானுவேல் சேகரனார் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் நல்லறம் அறக்கட்டளையின் தலைவர் அன்பரசன், அ.தி.மு.க சார்பாக கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே.அர்ச்சுனன் காங்கிரஸ் கட்சி சார்பாக செயல் தலைவர் மயூரா ஜெயகுமார்,பா.ஜ.க சார்பாக மாநில துணை தலைவர் வானதி சீனிவாசன் உட்பட பல்வேறு அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.இதில் அகில இந்திய மள்ளர் எழுச்சி பேரவையை சேர்ந்த சதீஷ்,பாபு, மகேஷ், ராஜேந்திரன், ஜெயகுமார், வினோத், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க