September 20, 2020
தண்டோரா குழு
கோவையில் நடிகர் சூர்யாவை கண்டித்து இந்து இளைஞர் முன்னணி சார்பில் சூர்யா உருவ படத்தை கிழித்தும் காலில் மிதித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவர்கள் ‘நீட்’ தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்று டாக்டர் ஆவதற்கு தயாராக உள்ளதாகவும், ஆனால் மாணவர்களை தவறாக சித்தரித்து அவர்களிடம் தற்கொலையை ஊக்குவிக்கும் விதமாக நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டுள்ளதாகவும், எனவே நடிகர் சூர்யா, மாணவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், அவரை கண்டித்தும் தமிழக முழுவதும் இந்து இளைஞர் முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதே போல் கோவை காந்திபார்க் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சூர்யாவின் படத்தை கிழித்தும் காலில் மிதித்தும் சூர்யாவிற்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். இதில் இந்து இளைஞர் முன்னணி மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் சண்முகம் மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர் நிர்வாக குழு உறுப்பினர் குணா கோட்ட செயலாளர் சதீஷ் உள்ளிட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர்.