May 20, 2020
தண்டோரா குழு
கோவையில் நடனகலை கூடங்கள் செயல்பட அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி் நடன கலைஞர்கள் கொரொனா வேடம் அணிந்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை மாவட்ட நடன கலைஞர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்திருந்தனர்.அப்போது கொரோனா மாதிரி வடிவமைப்பு உடையுடன் வந்திருந்தனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில்,
கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக வருமானம் இன்றி முடங்கி உள்ளதாகவும் இதனை நம்பி உள்ள நடன கலைஞர்கள் வாழ்வாதாரம் பாதிக்கபட்டு உள்ளதாக தெரிவித்தனர். இந்த தொழில் நலிவடைந்து விடாமல் பாதுகாக்கும் நோக்கில் சேவ் & சப்போர்ட் டான்ஸ் இண்டஸ்ட்ரீஸ் என்ற அமைப்பை துவங்கி உள்ளதாகவும் இதன் மூலமாக கடந்த இரு மாதங்களாக கிடைக்க பெற்ற உதவிகள் மூலம் இத்தொழிலை நம்பி வாழ்பவர்களுக்கு உதவியதாக கூறினர்.
மேலும், கோவை மாநகரில் 45 டான்ஸ் ஸ்டுடியோஸ் உள்ளதாகவும் அனைவரும் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருவதால் இரு மாதங்களுக்கு வாடகையில் விலக்கு அளிக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.இதே போல் இந்த தொழிலை நம்பி மேக்கப் செய்யும் 25 குடும்பங்கள் உள்ளதாகவும் கூடிய விரைவில் நடன நிகழ்ச்சிகள் நடத்த தங்களுக்கு அனுமதி தர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.