• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் நடத்தப்பட்ட 30வது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

February 5, 2019 தண்டோரா குழு

கோவையில் நடத்தப்பட்ட 30வது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியில் 500 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

30 வது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வார விழாவையொட்டி கோவையில் பேரணி நடத்தப்பட்டது. இதனை கோவை மாநகர காவல்துறை ஆணையர் சுமித் சரண் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்த பேரணியில் போக்குவரத்து காவல்துறையினர் , சட்ட ஒழுங்கு காவல்துறையினர், ஊர்காவல் படையினர் , சிறப்பு காவல் படையினர் என 500 க்கும் மேற்பட்டோர் விழிப்புணர்வு பாதகைகளை ஏந்தி கலந்து கொண்டனர். வ.உ.சி மைதானத்தில் துவக்கப்பட்ட இந்த பேரணி அண்ணா சிலை , பாலசுந்தரம் சாலை வழியாக மீண்டு வ.உ.சி மைதானத்தில் நிறைவடைந்தது.

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாரத்தையொட்டி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், போக்குவரத்து விதி மீறல்கள் குறித்து பொதுமக்கள் Police E- eye செயலி மூலம் பொதுமக்கள் புகார் அளிக்குமாறு , போக்கு வரத்து துணை காவல் ஆணையர் சுஜித் குமார் தெரிவித்தார்.

கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்ட இந்த செயலியை கோவையில் 7 ஆயிரம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளதாக கூறிய அவர், தினமும் 100 க்கும் மேற்பட்ட புகார்கள் பொதுமக்களிடம் இதன் மூலம் பெறப்படுவதாகவும் ,அதன் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு 3 லட்சம் ரூபாய் வரை வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் படிக்க