• Download mobile app
20 Mar 2026, FridayEdition - 3691
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் தொழில்நெறி வழிகாட்டு முறை குறித்த விழிப்புணர்வு பேரணி

July 9, 2018 தண்டோரா குழு

கோவையில் தொழில்நெறி வழிகாட்டு முறை மற்றும் திறன் வளர்ப்பு பயிற்சி குறித்த விழிப்புணர்வு முகாம் பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் ஆண்டுக்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பொறியியல் பட்டதாரிகளும்,பல லட்சக்கணக்கான கலை அறிவியல் பட்டதாரிகளும் படித்து முடித்த பின்பு வேலை கிடைக்காமல் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பன்னிரெண்டாம் வகுப்பில் இருந்தே திறன் பயிற்சிகளை மாநில அரசு வழங்கி வருகிறது.திறன் பயிற்சிகளை கற்றுக்கொண்டு அரசு காட்டக்கூடிய வழிகாட்டுதல் மூலம் வேலை வாய்ப்பை பெறும் வகையில் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதன் ஒரு பகுதியாக அரசினர் தொழிற்பயிற்சி நிலையம்,மற்றும் அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தின் சார்பாக நடைபெற்ற தொழில்நெறி வழிகாட்டும் மற்றும் திறன் பயிற்சி விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் தொடங்கி வைத்தார்.இந்த பேரணியில் திறன் பயிற்சி மற்றும் தொழில்நெறி சார்ந்த பாதகைகளை ஏந்தி நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க