• Download mobile app
30 Mar 2026, MondayEdition - 3701
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் தொடர் மழையால் குளிர்ச்சியான சூழல் நிழவி வருகிறது !

October 1, 2021 தண்டோரா குழு

கோவையில் இரவில் இருந்து பெய்து வரும் தொடர் மழையால் மாவட்டம் முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிழவி வருகிறது.

வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் ராமநாதபுரம், நரசிம்மநாயக்கன்பாளையம், சிங்காநல்லூர், சுந்தராபுரம், வடவள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவிலிருந்து தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இதனால் மாவட்டம் முழுவதும் குளிர்ந்த சூழல் நிலவி உள்ளது. மேலும் காலையில் பணிக்கு செல்வோர் குடைகளை பிடித்தவாறு உக்கடம், காந்திபுரம் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்து சென்றனர்.

மேலும் படிக்க