March 5, 2021
தண்டோரா குழு
கோவையில் தேர்தல் பணிக்காக மொத்தம் 21 ஆயிரத்து 500 பணியாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.இவர்களுக்கு வரும் 14ம் தேதி முதல் கட்ட தேர்தல் பயிற்சி பத்து சட்டமன்ற தொகுதிகளிலும் நடக்க உள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கோவையில் உள்ள பத்து சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் பணிகள் தீவிரமடைந்துள்ளன. கோவையில் 4 ஆயிரத்து 467 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இதுதவிர 30 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனிடையே கோவையில் தேர்தல் பணியில் மட்டும் 21 ஆயிரத்து 500 அரசு பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில்,
‘‘வரும் 14 ம் தேதி பத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அத்தொகுதிகளுக்குட்பட்ச கல்வி நிறுவனம் ஒன்றில் தேர்தல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சியில் வாக்குச்சாவடிகளில் எவ்வாறு பணி மேற்கொள்ள வேண்டும். வாக்குப்பெட்டிகளை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்தி பயிற்சி அளிக்கப்படும்,” என்றனர்.