• Download mobile app
21 Sep 2026, MondayEdition - 3876
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் தேசிய கொடி ஏற்றி ரூ.49 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் மாவட்ட ஆட்சியர்

January 26, 2019 தண்டோரா குழு

நாட்டின் 70 வது குடியரசு தினத்தை முன்னிட்டு கோவையில் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தேசிய கொடியை ஏற்றி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

கோவை வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்ற விழாவில் தேசிய கொடியை ஏற்றி வைத்த ஆட்சியர் ஹரிஹரன், காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு முதலமைச்சர் பதக்கங்கள், சிறப்பாக சேவையாற்றிய துறைகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் ஆகியவற்றை ஆட்சியர் வழங்கினார். தொடர்ந்து 49 லட்சம் ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார்.

இவ்விழாவில் மாநகர காவல் ஆணையர் சுமித் சரண், மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பெரியய்யா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் உள்ளிட்ட பல்வேறு அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு நடைபெற்ற பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளின் நடனம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

மேலும் படிக்க