August 18, 2020
தண்டோரா குழு
கோவையில் தேசியக் கொடியை அவமதித்ததாக பாஜக நிர்வாகி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி 74 ஆவது இந்திய சுதந்திர தினம் நாடு முழுவதும் தேசியக் கொடி ஏற்றி கொண்டாடப்பட்டது. இந்நிலையில் கோவை மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர், காவல் ஆணையாளர், நகர அலுவலகங்கள், கிராமப்புற அலுவலகங்கள், அரசியல் கட்சிகளின் சார்பில் என பல தரப்பினரால் கொடியேற்றி மரியாதை செலுத்தப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக கோவை சரவணம்பட்டி காவல் எல்லையில் பாரதீய ஜனதா கட்சியினர் சார்பில் கடந்த ஆகஸ்ட்15ம் தேதி தேசிய கொடியேற்றப்பட்டது. ஆனால், பாஜக
கட்சி கம்பத்தில் தேசிய கொடி ஏற்றியதாக கூறப்படுகிறது.இதனையடுத்து சரவணம்பட்டி ஜனதா நகரில் வசிக்கும் இளையராஜா என்பவர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில், தேசியக்கொடியை பாஜக கட்சி கம்பத்தில் ஏற்றிய கணபதி மண்டல தலைவர் வெங்கடேஷ் மீது இன்று தேசியக் கொடி அவமதிப்பு வழக்கை போலீசார் பதிவு செய்துள்ளனர்.