September 18, 2017 
தண்டோரா குழு
                                கோவை காந்திபுரம் நகரபேருந்து நிலையத்தில் தூய்மை இந்திய திட்டத்தின் “தூய்மையே சேவை” இயக்கபணிகளை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள்செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கிவைத்தார்.
மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தில் அனைத்து மக்களையும் பங்கு பெறும்வகையிலும், அனைத்து இடங்களையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வலியுறுத்தும் வகையிலும்,சுகாதாரம் ஒவ்வொருவரின் பொறுப்பு என்பதை உணர்த்தும் வகையிலும் “தூய்மையே சேவை” இயக்கபணிகள் கோவை மாநகராட்சி சார்பாக செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 2 வரை மேற்கொள்ளப்படவுள்ளது.
இது தொடர்பாக இன்று கோவைகாந்திபுரம் நகர பேருந்து நிலையத்தில் சுத்தம் செய்யும்பணிகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கிவைத்தார்.
“இந்த தூய்மையே சேவை இயக்கத்தின் மூலம் திறந்த வெளியில் மலம் கழித்தல் அற்ற நிலை உருவாக்குதல்,கழிவறை இல்லாத வீடுகளில் கழிப்பறை கட்டுதல். அனைத்து பொது இடங்களிலும் சுத்தம் செய்தல்.பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், சுற்றுலா மற்றும் வழிபாட்டுதளங்களை சுத்தம் செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்,” என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் மாநகராட்சி மேற்கொள்ளும் இந்த “தூய்மையே சேவை” இயக்க பணிகளுக்கு அனைத்துபொதுமக்களும் ஒத்துழைப்பு நல்கி, தங்கள் சார்ந்த அனைத்து இடங்களையுதட சுத்தமாக வைத்துகொள்ளுமாறு மாநகராட்சி சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.