• Download mobile app
25 Apr 2024, ThursdayEdition - 2997
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் தி.மு.க.வினர் கையில் கருப்பு கொடி ஏந்தியவாறு ஆர்ப்பாட்டம்

December 5, 2020 தண்டோரா குழு

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக கோவையில் தி.மு.க.வினர் கையில் கருப்பு கொடி ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேளாண் சட்டத்திற்கு எதிராக டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்தப்படும் என தி.மு.க.தலைவர் ஸ்டாலின் அண்மையில் அறிவித்திருந்தார்.அதன்.படி கோவையில் தி.மு.க. மாநகர் கிழக்கு ,மேற்கு, வடக்கு,மற்றும் கிழக்கு மாவட்டம் சார்பாக பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் சேனாதிபதி தலைமையில் மலுமிச்சம்பட்டி பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக முன்னால் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி கலந்து கொண்டு பேசினார்.ஆர்ப்பாட்டத்தில் திரளான தி.மு.க.தொண்டர்கள் கையில் கருப்பு கொடி ஏந்தியபடி புதிய வேளாண் மசோதாவை திரும்ப பெற கோரி கோசங்கள் எழுப்பினர்.இதில் மதுக்கரை ஒன்றிய குழு துணை பெருந்தலைவர் MRR .பிரகாஷ், மதுக்கரை ஒன்றிய செயலாளர் ராஜசேகர்,கதிரேஷ்குமார்,உட்பட பேரூராட்சி கழக செயலாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் உட்பட 1000-க்கும் மேற்பட்டவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க