• Download mobile app
20 May 2025, TuesdayEdition - 3387
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் திருநங்கை வெட்டி படுகொலை – போலிஸ் விசாரணை

October 21, 2020 தண்டோரா குழு

கோவையில் டிரான்ஸ் கிச்சன் என பிரியாணி உணவகத்தை ஆரம்பித்த சங்கீதா என்ற திருநங்கை கோவை சாயிபாபா காலனி பகுதியில் வீட்டில் உடலில் வெட்டு காயங்களுடன் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கண்டெடுப்பட்டுள்ளார்.

கோவை சாயிபாபா காலனி பகுதியில் திருநங்கை சங்கீதா என்பவர் வசித்து வருகிறார். அவர் திருநங்ககைகள் நல்வாழ்விற்காக பல்வேறு நலத்திட்டங்களுக்காக தொடர்ந்து பணியாற்றி வந்தவர். மேலும் கடந்த மாதம் டிரான்ஸ் கிச்சன் என்ற பெயரில் தமிழகத்திலேயே முதல்முறையாக பிரியாணி விற்பனை உணவகத்தை ஆரம்பித்தார் நல்ல வரவேற்பு கிடைக்கப்பெற்று வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக அவரது எண் அணைத்து வைக்கப்பட்டு இருந்ததால் , உடன் இருந்த திருநங்கைகள் இன்று அவரது வீட்டிற்கு வந்து பார்த்துள்ளனர்.

அப்போது உடலில் வெட்டு காயங்களுடன் தண்ணீர் டிரம்பில் உடல் அடைக்கபட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த திருநங்கைகள் சாயிபாபாகாலனி காவல்நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். இந்நிலையில் கொலை சம்பவம் தொடர்பாக தகவலறிந்து வந்த காவல்துறையினர்,உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்து வரும் காவல்துறையினர் கொலை செய்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் அருகிலுள்ள சிசிடிவி காட்சிகளை காவல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும் திருநங்கை படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை அறிந்து வந்த மற்ற திருநங்கைகள் இப்பகுதிகள் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

மேலும் படிக்க