• Download mobile app
08 Nov 2025, SaturdayEdition - 3559
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் திமுக எம்.பி தயாநிதி மாறன் மீது எஸ்சி எஸ்டி பிரிவில் வழக்குப்பதிவு

May 19, 2020 தண்டோரா குழு

கோவையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் மீது எஸ்சி எஸ்டி பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், திமுகவின் ஒன்றிணைவோம் வா என்ற திட்டத்தின் கீழ் மக்களிடம் இருந்து கோரிக்கைகள் பெறப்பட்டன. அவற்றில், ஒரு லட்சம் கோரிக்கை மனுக்களை கடந்த 13ம் தேதி தலைமை செயலாளர் சண்முகத்திடம் திமுக எம்பிக்கள் வழங்கினர்.

மனுக்களை தலைமை செயலாளரிடம் கொடுத்த பின்னர் திமுக எம்பிக்களான தயாநிதி மாறன் மற்றும் டி.ஆர்.பாலு செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது, தலைமை செயலாளர் சண்முகம், எம்பிக்களான தங்களை மூன்றாம் தர மக்கள் போல நடத்தியதாகவும் நாங்கள் என்ன தாழ்த்தப்பட்டவர்களா என்று சர்ச்சைக்குரிய வகையில் தயாநிதி மாறன் பேசினார்.
இதனால் பல்வேறு தரப்பில் இருந்தும் விமர்சனங்களும் எழுந்தன.

இந்த நிலையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறனின் பேச்சு, பட்டியல் சமூக மக்களைக் கேவலப்படுத்தும் வகையில் உள்ளதாகக் கூறி நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் மீது கோவை வரைட்டி ஹால் ரோடு காவல் நிலையத்தில் ஜெகநாதன் என்பவர் புகார் அளித்தார். புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறையினர் எஸ்சி எஸ்டி பிரிவில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும் படிக்க