April 15, 2019
தண்டோரா குழு
தமிழ்நாட்டின் புகழ்பெற்ற திருவிழா சிறப்புகளை எடுத்துத்துரைக்கும் விதமாக 14 வகையில் பொங்கல், மாரியம்மன் கோவில் குண்டம், நாகூர் ஆண்டவர் கோவில் என வண்ண புகைப்படத்துடன் போஸ்ட் கார்டு தயாரிப்பு செய்து இன்று கோவை தலைமை தபால் நிலையத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட்டனர்.
இது குறித்த தபால் துறை அதிகாரிகள் கூறுகையில்.
இந்திய அஞ்சல் துறை தபால் சேவைகள் மட்டும்மில்லாது வங்கி மற்றும் சமுக பணிகளை செய்து வருகிறது மேலும் மாநில திருவிழா களை மைப்படுத்தும் விதமாக வண்ண புகைப்படங்கள் கொண்டு வாழ்த்து அஞ்சல் அட்டை பேக் தயாரிப்பு செய்து உள்ளோம் இதில். 14 சிறப்புகளை கொண்டு உருவாக்கி உள்ளோம் குறிப்பாக பொங்கல் விழா குறித்த படங்கள் பிரத்தியேக மாக எடுத்து உள்ளோம் தொடர்ந்து பல்வேறு வடிவங்களில் மாநில தகவல்கள் பதிவு செய்ய உள்ளோம் என தெரிவித்தனர்.